×

செல்போனில் நீண்ட நேரம் செலவிடுவதை பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை

பல்லாவரம்: ஜமீன் பல்லாவரம், அம்பேத்கர் நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் விக்னேஸ்வர் (16), அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர், பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் செல்போனில் வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவதாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், வீட்டில் இருந்த விக்னேஸ்வர் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை, தாய் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த விக்னேஸ்வர் தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் பொழிச்சலூரை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஹரிணி (16) தனது பள்ளி ஆசிரியை திட்டியதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாய் திட்டியதால் பள்ளி மாணவன் விக்னேஸ்வர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது….

The post செல்போனில் நீண்ட நேரம் செலவிடுவதை பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Senthilkumar ,Zamin Pallavaram ,2nd Cross Street, Ambedkar Nagar ,Vigneswar ,
× RELATED சலுகை விலை அறிவிப்பால் துணிக்கடையில்...